தேர்தல் பிரச்சாரங்களை முடித்துக்கொண்டு நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி அம்மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் ஆகும். எனவே பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.