எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது.. ஒன்றிய பாஜக அரசின் புதிய வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி,ஷாஹின் பாஃக் போராட்டக் குழு மற்றும் இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினேன். எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அதனை போராடி வெல்லும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு. இஸ்லாமியர்களின் சொத்துக்களை பறித்து, அவர்களை சட்டத்தின் மூலம் ஒடுக்க பார்க்கிறது ஒன்றிய அரசு. இஸ்லாமியர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. @Tupkselvaraj, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
