கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோடாங்கி பட்டி பகுதியில் நாளை திமுக சார்பில் நடைபெற உள்ள மாபெரும் முப்பெரும் விழாவை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு அமைச்சர்கள் காவல்துறை அதிகாரிகள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையை
ஒட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் நிலையில் கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் முப்பெரும் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டு செல்பி எடுத்து செல்கின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் ஏராளமான திமுக தொண்டர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.முப்பெரும் விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் போலீசார் நான் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சம் இருக்கைகள் போடப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் முப்பெரும் விழா கழுகு பார்வை காட்சி.