புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 139வது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு ஆட்சியர் மு.அருணா மாலை அணிவித்து , அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்குள்ள மருத்துவர் மற்றும் மாணவர்களுக்கு
இனிப்பு களை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா , அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ).மரு.ஜி.ஏ.ராஜ்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
