கும்பகோணத்தில் நான்கு வயது சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகளும், மேலும் நாய்களுக்கு பயந்து அச்சத்துடன் சிறுவர்கள் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெருவில் நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தோம் நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணரி வருகிறது.
இந்நிலையில் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து புத்தக பையுடன் டியூசனுக்கு நடந்து சென்ற நான்கு வயது சிறுமியை தெருநாய்கள் விரட்டி விரட்டி கடித்துள்ளன. உடனடியாக சிறுமி தன்னுடைய வீட்டிற்குள் சென்று கதவை மூடி தப்பித்துக் கொண்டார்.
அதேபோல் அப்பகுதியில் நடந்து சென்ற சிறுவர்களை ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் விரட்டியதால் அச்சமடைந்த சிறுவர்கள் தங்கள் பெற்றோர் உதவியுடன் நடந்து சென்றனர். தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது