Skip to content

ஆதாரம் இல்லாமல் பேசாதீங்க… ரஜினி விவகாரம்-திருமா கருத்து

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு பிரபலமான தலைவராக வர வேண்டும் என்று ரஜினி நினைத்தார். அரசியலில் சிஸ்டத்தை மாற்ற நினைத்தார். எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவர் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள்.

இன்றைக்கு அவருடைய நிலைமை என்ன? கடைசியில் அவர்கள் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடிக்க போய் விட்டார். அவர் மேல் விமர்சனம் கிடையாது. ஆனால், அரசியலில் அந்த மனவலிமை நம்ம விஜய் கிட்ட இருக்கு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்” என தெரிவித்தது கடும் விமர்சனங்களை கிளப்பியது. ரஜினி ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்தனர்.

இது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: இது ஒரு ஆதாரம் இல்லாத கருத்து. அவர் எந்த அடிப்படையில் இதை இவ்வாறு சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. பதவி, அதிகாரம் போன்றவற்றில் ரஜினி பெரிய ஈடுபாடு உள்ளவர் அல்ல. ஆசை உள்ளவர் அல்ல.அவர் அந்த நிலையில் இருந்து முற்றிலும் விலகி நிற்பவர். முதிர்ச்சி அடைந்தவர் என்று நான் நம்புகிறேன். ஆகவே அவர் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சி தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருக்க வாய்ப்பே இல்லை. அது ஒரு தவறான கருத்து என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

error: Content is protected !!