Skip to content

குவாட்டமாலாவில் அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம்

மத்திய அமெரிக்காவில் உள்ள  ஒரு சிறிய நாடு குவாட்டமாலா.  இந்த குவாட்டமாலா நாட்டில்  அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.  நேற்று முன்தினம்  மதியம் முதல்  இன்று அதிகாலை வரை இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 3 முதல் 5.7 ஆக பதிவாகி இருந்தது. இதில், 4 பேர் வரை பலியாகி உள்ளனர். இதனை அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ ஆரிவாலோ உறுதிப்படுத்தி உள்ளார். இதில், செல்ல நாயுடன் பெண் ஒருவர் உடல் புதைந்து கிடந்ததையும்,  13 வயது சிறுவனின் உடல் ஒன்றும் நேற்று மீட்டனர்.

இதுதவிர, எஸ்குவின்ட்லா பகுதியில் லாரியில் சென்றபோது பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 ஆண்கள் பலியானார்கள்.தொடர் நிலநடுக்கங்களால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வந்த மக்கள் குடும்பத்துடன் தெருக்களில் சென்று இரவில் படுத்து தூங்கினர். நிலநடுக்கங்களால் கட்டிடங்கள், நிலச்சரிவுகள் மற்றும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி சென்றுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!