ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், 19.3 கி.மீ. ஆழத்தில், 1.65 லட்சம் பேர் வசிக்க கூடிய அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.எனினும், பின்னர் நில நடுக்கம் ரிக்டர் அளவில் 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. 32 நிமிடங்களில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் உருவாகின. இதனால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை தாக்கிய சுனாமியால் ஏதும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் தெரிவித்துள்ளது.