சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி……..மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. புயல் மழை பாதிப்புகள் வந்தால் உடனடியாக சரிசெய்வது குறித்த ஆலோசனை இந்த கூட்டத்தில் நடத்தப்பட்டது. 11 ஆயிரம் மின்வாரிய பணியாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மின் இணைப்புகளை சரி செய்வதற்காக 200 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. 2 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 12 ஆயிரம் கிமீ மின் கம்பிகள் தயார் நிலையில் உள்ளது. 15 ஆயிரம் மின் மாற்றிகள் தயாராக கையிருப்பில் உள்ளது. சென்னையில் மட்டும் 1100 பேர் பணி செய்வதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். காற்றின் வேகத்தை பொறுத்து மின்விநியோகம் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உதவி தேவைப்படுவோர்கள் மின்னகத்தின் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.