Skip to content

ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள்  திருமணம் இன்று மதுரை திருமங்கலத்தில்  நடந்தது. அதே மேடையில் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வருமோ என நேற்று முதல்  கலங்கி போய் இருந்தேன்.  எப்படி தீர்ப்பு இருக்குமோ என்ற ஐயத்தோடு இந்த திருமண விழாவுக்கு வந்தேன். தீர்ப்பு எப்படி வரும் என யாருக்கும் தெரியாது.  உதயக்குமார் தெய்வ பக்தி மிகுந்தவர். திருமண மண்டபத்திற்கு  செல்வதற்கு முன் அம்மா கோயிலுக்கு சென்று விட்டு வரலாம் என அழைத்து சென்றார்.

அம்மா கோயிலுக்கு சென்று  எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு இன்று வர உள்ள தீர்ப்பு  நல்ல தீர்ப்பாக இருக்கணும் என  வேண்டினேன். தெய்வக்தியோடு உள்ள அந்த கோயிலில் வேண்டினேன். சில நிமிடத்தில் அற்புதமான  தீர்ப்பு வந்து விட்டது.

எத்தனை சோதனைகள் வந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என  தெய்வசக்தி மிக்க தலைவர்கள் , நம்முடைய தலைவர்கள்  நல்ல தீர்ப்பு தந்தார்கள்.  ஜெயலலிதா அவர்கள் பேசும்போது, எனக்கு பின்னால் அதிமுக 100 ஆண்டுகாலம்  வாழவேண்டும் என்றார். இந்த தீர்ப்பு மூலம் அது சாத்தியமாயிறு்.

இந்த தீர்ப்பு மூலம் சில எட்டப்பர்களின்(ஓபிஎஸ்) முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. 6, 7 மாத காலம்  நாம் பட்ட கஷ்டம் எண்ணிலடங்காது.  அதிமுக 4 ஆகிவிட்டது என்றார்கள். ஊடகத்திலும், பத்திரிகையிலும் விவாதிப்பவர்கள் இனி அப்படி சொல்ல வேண்டாம்.  அதற்கு இந்த தீர்ப்பு  முடிவு கட்டி விட்டது.  அதிமுக இப்போது ஒன்றாகி விட்டது என சொல்லுங்கள்.

அதிமுக மக்களுக்காக உழைக்கும் கட்சி. அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும்.  பத்திரிகைகள், ஊடகங்கள் முக்கியம்.  அதற்கு சக்தி உண்டு. தர்மம், நீதி அடிப்படையில்  ஊடகங்கள் எங்களுக்கு துணை நிற்க வேண்டும்.

இந்த 51 ஜோடிகளும் ராசியான ஜோடிகள்.  எங்கள் திருமணத்தன்று அதிமுக தீர்ப்பு வந்தது என்று அவர்கள் சொல்லிக்கொள்வார்கள்.  மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி செய்தி தான்.  அம்மா கோயிலில் வழிபட்டால் வெற்றி  நிச்சயம்.  அந்த கோயிலில் தெய்வ சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.  அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு உயிரூட்டப்பட்டுள்ளது.  இனி எந்த கொம்பனாலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

அதிமுக தொண்டர்கள் மீது ஆளுங்கட்சி வழக்கு பதிவு செய்கிறது. அதிமுகவின் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது.ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்க பா.ஜ.வை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வந்தார். அடுத்த 2வது நாளில் அவர் ஜார்கண்ட் கவர்னராகி விட்டார்.  அறிமுகமே நல்ல செய்தி. இப்போது  பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வந்து உள்ளது.

3வதாக  வரும் மார்ச் 2ம் தேதி  தென்னரசு வெற்றி என்ற  செய்தி வரும்.  நாங்கள் வெற்றி முகத்தை நோக்கி செல்கிறோம். எங்கள் ஆட்சியிலும் இடைத்தேர்தல்கள் நடந்தது. இப்படியா அடைத்து வைத்தோம்.  வாக்காளர்களை அடைத்து வைத்து பிரியாணி சாப்பாடு  போடுகிறார்கள்.  ஆனால் அவர்கள் எங்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!