அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பரப்புரையை மேற்கொண்டார்.
அரியலூரில் பரப்புரையை முடித்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் விளாங்குடி எனும் ஊரில் சாலையில் காத்து நின்ற பெண்களோடு இறங்கி எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார்.
அப்போது, உத்திராணி பச்சைமுத்து என்ற பெண்மணி, தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி தேவை என எடப்பாடியிடம் கோரியிருந்தார்.
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, மனுவாக எழுதி மாவட்டக் கழகச் செயலாளரிடம் அளிக்குமாறும், நிச்சயம் கட்சி சார்பில் உதவி செய்கிறோம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை. ராஜேந்திரன் மூலமாக உத்திராணியை நேரில் அழைத்து, அதிமுக சார்பில், மருத்துவ செலவுகளுக்காக ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவிக்கான காசோலையை நேரில் வழங்கினார்.