முட்டை விலை கடந்த 22 நாட்களாக ரூ 6.10 காசுகளாக இருந்து தற்போது 5 பைசா உயர்ந்து ரூபாய் 6.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குளிர்காலம் என்பதால் முட்டைகளை அதிக விரும்பி சாப்பிடும் எண்ணிக்கை அதிகம் உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இந்த முட்டை விலையை அறிவித்துள்ளது.மற்ற மண்டலங்களின் விலை உயர்வு, உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு, குளிர்காலம் என்பதால் வடமாநிலங்களுக்கு செல்லும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகம் என பல காரணங்களை கூறி வருகின்றனர்
அதே நேரத்தில் தேவை அதிகரித்திருப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனுடன், போக்குவரத்து செலவு, கோழி தீவன விலை உயர்வு போன்ற மறைமுக காரணிகளும் முட்டை விலையை மேலே தள்ளியுள்ளன.
இதுமட்டுமின்றி, நாமக்கலிலிருந்து கேரளா, கரநாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் தினசரி விற்பனைக்காக முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வளவு பெரிய அளவிலான விநியோகத்தை மேற்கொண்டுவரும் நாமக்கல் மண்டலத்தில், தற்போது ஒரு முட்டை ரூபாய் 6.15 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவது, கடந்த 55 ஆண்டுகால பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். இந்த விலை உயர்வு விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு ஓரளவு நன்மை அளித்தாலும், பொதுமக்கள் மத்தியில் செலவு சுமையை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

