அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்பு செயலாளருமான அன்வர்ராஜா, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை கடுமையாக எதிர்த்து வந்தார். இது குறித்து தனது எதிர்ப்பை பல முறை பதிவிட்டு ந்தார். இவர் அதிமுக எம்.பியாக இருந்தபோதும, இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்தவர். தற்போது பாஜகவால், தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அன்வர்ராஜா, அண்ணாஅறிவாலயம் வந்தார். அவர் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளார். இதனால் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் அன்வர்ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.