கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் கல்விச் சீரை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளிக்கு வழங்கி அசத்தினர்.
கோவை துடியலூர் அருகே இடிகரை கிராமத்தில் 1926ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி உள்ளது. இங்கு 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து

வருகின்றனர். இப்பள்ளி தொடங்கி இந்த ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நூற்றாண்டு விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இதில் முதல் நிகழ்வாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 108 தட்டுகளில் பழங்கள், பூக்கள், இனிப்புகள், பேனா, பென்சில், கலர் பென்சில், ஸ்கெட்ச், சாக்பீஸ், டஸ்டர், பேப்பர், மார்க்கர், நோட்புக், கடிகாரம், தம்ளர், ஸ்கேல், ஸ்டேப்ளர், பைல்கள், மேப்கள் என பள்ளிக்கும், மாணவர்களுக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக எடுத்துக்கொண்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டுவந்து வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இப்பள்ளி ஆரம்பிக்க உதவியவர்களின் குடும்பத்தினர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

