Skip to content

ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி மோசடி- 17 ஆண்டு சிறை

ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர் அறக்கட்டளை தலைவர், ஐபிஎஸ் அதிகாரி, அரசியல்வாதி என பல வேடங்களில் மக்களை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி என பெண் காவலரை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், ரூ.5 லட்சம் பணம் சுருட்டிய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலூரில் பாஜக சார்பில் போட்டியிட்டு விஜயபானு தோல்வியடைந்தார்.

விஜயபானு மீது சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா, வேலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் உள்ளன. 8 பிரிவுகளின் வழக்குப் பதிந்த நிலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 2 முதல் 3 ஆண்டு வரை என 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளை நடத்தி மக்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்த வழக்கும் விஜய்ப்பனு மீது உள்ளது. அறக்கட்டளை மோசடி வழக்கில் நடத்திய சோதனையில் ரூ.12 கோடி, 2.5 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!