Skip to content

மீண்டும் ஏறுது தங்கம் விலை- பவுன் ரூ.72,520

 

 தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே  யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை  உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.

அந்த வகையில், கடந்த 14-ந் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனையானது. அதன் பின்னர் 21-ந் தேதி முதல் தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. இந்த சூழலில் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளிலும் தங்கத்தின் விலை குறைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் (ஜூலை 1) திடீரென  உயர்ந்தது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.72,520-க்கும், ஒரு கிராம் ரூ.9,065-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக விலை தொடர்ந்து சரிந்துவந்த நிலையில், மாதத்தின் முதல்நாளில் நேற்று உயர்ந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840  உயர்ந்து  ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல் ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனையானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் 72,520 ரூபாய்க்கும்,  ஒரு கிராம் ரூ.9,065 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
error: Content is protected !!