Skip to content

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும்…. – திருச்சியில் கவர்னர் ரவி

  • by Authour

பாரதியார் பிறந்த நாளையொட்டி தேசிய மொழிகள் தினம், ராமலிங்க வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி, இந்தியா சுதரந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவடைந்த அமுதப்பெருவிழா என முப்பெரும் விழா திருச்சி நேஷனல் கல்லுாரியில் நடைபெற்றது. இதனையொட்டி இந்திய விடுதலைப்போரில் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பு என்ற ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசும்போது……இந்திய சுதந்திர போராட்ட வரலாறு இந்திய தேசிய காங்கிரஸை மட்டும்

மையப்படுத்தப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். கிராமம் கிராமமாக போராட்டங்கள் நடந்துள்ளது. அது குறித்தெல்லாம் முழுமையாக இல்லை. நான் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து பட்டியல் கேட்டேன் வெறும் 30 பேர் பட்டியல் மட்டும் தான் தந்தார்கள் தற்பொழுது நான் அது குறித்து கவனம் செலுத்தும் போது 800-க்கும் அதிகமானோர் பட்டியல் உள்ளதுஅகிம்சை போராட்டம் தான் அதிக அளவு பதிவாகி உள்ளது. ஆயுத போராட்டங்கள் அதிகம் பதிவாக வில்லை அவற்றையும் பதிவு செய்ய வேண்டும் எனவே சுதந்திர போராட்டம் மக்களை மையப்படுத்தி ஆவணப்படுத்தப்பட்டு,  அதன் பின்னர் திருத்தி எழுத்தப்பட வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *