தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (13.12.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவில் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.நா. முருகானந்தம்,இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு. ரவீந்திரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.