மளிகை கடைகள், ஓட்டல்கள் திறந்திருக்கலாம்…தமிழக அரசு

490
Spread the love

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை  144 தடை விதிக்கப்பட்ட நிலையில்  ஊரடங்கு சட்டம் வரும் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.. அவசர உதவி தேவைப்பட்டால் 108 என்ற எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம். மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படுகிறது. கிராமம், நகரங்களில் தனியார் வங்கிகள் சிறிய நிதி நிறுவனங்கள் பண வசூல் செய்யக்கூடாது. வீடுகளுக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கான தடை தொடர்கிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறி கடை இயங்கலாம். அதேசமயம் மளிகை மற்றும் உணவங்கள் திறந்திருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 

LEAVE A REPLY