Skip to content

குரூப் 2, 2A காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு

  • by Authour
 ​சார்- பதி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு  துறைகளில் உள்ள  645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி நேற்று வெளி​யிட்​டது. குரூப்-2 ஏ தேர்​வு​முறை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுஉள்​ளது. இது குறித்து டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​,கோ​பாலசுந்​தர​ராஜ்  வெளி​யிட்டுள்ள செய்​திக்​குறிப்​பு: டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி, சார்​-ப​தி​வாளர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், வனவர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் 645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஜூலை 15-ம் தேதி  வெளி​யிடப்​பட்​டது.
முதல்​நிலைத் தேர்வை பொருத்தவரை​யில் குரூப்-2,குரூப்-2 ஏ இரு தேர்வு​களுக்​கும்பொது​வான தேர்​வு​தான். பொது அறிவு மற்​றும் கணிதம் தொடர்​பான100 கேள்வி​கள், பொது தமிழ் அல்​லது பொது ஆங்​கிலம் பாடத்​தில் 100 கேள்வி​கள் என மொத்​தம் 200 கேள்வி​கள் இடம்​பெறும். ஒரு கேள்விக்கு ஒன்​றரை மதிப்​பெண் வீதம் மொத்​தம் 300 மதிப்​பெண். இதில் வெற்​றி​பெறு​வோர் அடுத்​தகட்ட தேர்​வான முதன்​மைத் தேர்​வுக்கு அனு​ம​திக்​கப்​படு​வர்.
முன்பு பொது அறிவு பகு​தி​யில் பொதுதமிழ் அல்​லது பொது ஆங்​கிலம் தொடர்​பான 60 வினாக்​கள் இடம்​பெற்​றிருந்​தன. தற்​போது புதிய தேர்​வு​முறை​யில் அப்​பகுதி நீக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், விரி​வாக பதில் எழுதக்​கூடிய கட்​டாய தமிழ் மொழித் தகு​தித்​தாள் தேர்வு குரூப்-2 குருப் 2-ஏ இரு முதன்​மைத் தேர்​விலும் பொது தேர்​வாக இடம்​பெறும். இதில் குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். இந்த தேர்​வில் எடுக்​கும் மதிப்​பெண் ரேங்க் பட்​டியல் தயாரிக்க எடுத்​துக் கொள்​ளப்​ப​டாது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.  ஒருங்​கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ தேர்​வுக்கான காலிபணியிடங்கள் 645 என அறிவிக்கப்பட்டபோதிலும் தேர்வு முடியும் நிலையில் காலி பணியிடங்கள் ஆயிரம் வரை  உயரலாம் என்ற எதிர்பார்ப்பு  உள்ளது.    
error: Content is protected !!