தென் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட வாய்ப்புள்ளது.

