திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அபிராமி வயது 42 .இவர் திருச்சியை சேர்ந்த கணவன் மனைவி இடம் ரூபாய் 30 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கு தன்னுடைய நிலத்தை அடமானம் வைத்துள்ளார் இந்த நிலையில் ஒரு வருடத்தில் வாங்கிய கடன் பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டார். இந்நிலையில் கடன் கொடுத்த கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சம்பவத்தன்று அபிராமி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தி அபிராமியை மிரட்டி வீட்டில் இருந்த 85 பவுன் நகை மட்டும் ரூபாய் 75 ஆயிரம் பணத்தை தேடி சென்று உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் அபிராமி புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் தம்பதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

