தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ம் ஆண்டு ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். அவர் கடந்த 2012 ஏப்ரல் 27 அன்று நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்து அவருக்கு முடிசூட்டுவிழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து நித்தி, மதுரை ஆதினத்தின் பிற கிளை மடங்கள், சொத்துக்களை எல்லாம் ஆய்வு செய்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் நித்யானந்தாவின் தில்லுமுல்லுகள் தெரியவந்ததால் அவரது நியமனத்தை அருணகிரிநாதர் ரத்து செய்தார்.
இந்த நிலையில் நித்யானந்தா கைலாசாவுக்கு ஓடிவிட்டார். அங்கிருந்த நிலையில் இப்போது மதுரை ஐகோர்ட் கிளையில் நித்தியானந்தா ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்து உள்ளார். அதில் அருணகிரிநாதர் மறைவுக்கு பின்னர் நானே மதுரை ஆதினத்தின் மடாதிபதி என அறிவிக்க வேண்டும் என கேட்டு உள்ளார். இது குறித்து அறநிலையத்துறையும், ஆதீனமும் விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.