Skip to content

“சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியில் வரும் ஆள் நான் இல்லை”… துணை முதல்வர் உதயநிதி

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கினாா் துணை முதலமைச்சர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற 819 நபா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 4,518 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.150 கோடி உயரிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ” நம் விளையாட்டு வீரர் – வீராங்கனையருக்கு திராவிட மாடல் அரசின் ஊக்கமும் உற்சாகமும், ஒவ்வொரு ஆடுகளத்தையும் வெற்றிக்கான களமாக்கி வருகிறது.

அந்த வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்த 819 வீரர் வீராங்கனையருக்கு ரூ.21.40 கோடி High Cash Incentive-இன்று வழங்கினோம்.

தொடர்ந்து பேசிய அவர், ”நான் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செல்கிறேன். வாரத்திற்கு 4, 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். நான் சனிக்கிழமைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை என்று நடிகர் விஜயை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

error: Content is protected !!