இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கடந்த 19ம் தேதி நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி இடம் பெற்றிருந்தார். இவரும் தன் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியை ஷமியின் தாயார் அனும் அரா உத்தர பிரதேச மாநிலத்தின் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்த தனது கிராமத்தில் உள்ள வீட்டில் கண்டுகளித்தார். போட்டியின் போது இந்தியா வெற்றி வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டதால், அனும் அரா உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு அவரை மாற்றினர். தற்போது அவர் நலம் பெற்று உள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.