இந்திய உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாகக் குளறுபடிகளால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் 4,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகள், துணை விமானிகளுக்கான வாராந்திர ஓய்வு மற்றும் ஏர்பஸ் 320 விமானங்களின் பாதுகாப்பு மென்பொருள் மேம்பாடு போன்ற இந்திய விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் உத்தரவுகளை இண்டிகோ நிறுவனம் பின்பற்றத் தவறியதே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

