கோவையில் நடைபெற்ற தேசிய கண்டுபிடிப்பாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்,உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம். கோவையில் தேசிய அளவிலான கண்டுபிடிப்பாளர் மாநாடு திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கல்லூரியில் நடைபெற்றது..
விழாவில் கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் டாக்டர் வி. நாராயணன் பள்ளி கல்லூரி மாணவர்கள் காட்சி படுத்தி இருந்த பல்வேறு வகையான புதிய கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.. இதில் அவருடன் அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவீந்தர் கவுர்,மொரிசியஸ் நாடுகளின் கௌரவ வர்த்தக ஆணையர் முனைவர் கிருஷ்ணதாஸ், பி.கே.தாஸ் பல்கலைக்கழக சார்பு வேந்தர் முனைவர். கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
விழாவில் சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு பரிசுகளை இஸ்ரோ தலைவர் நாராயணன் வழங்கி பாராட்டினார்..
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர்,இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பல்வேறு துறைகளில் பின்தங்கி இருந்த நிலையில் தற்போது உலக நாடுகள் வரிசையில் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்..
மருத்துவம்,கல்வி,கிராம நகர்ப்புற கட்டமைப்புகள்,அறிவியல் தொழில் நுட்பம், வேளாண்மை ,பயோ தொழில் நுட்பம் என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னனி நாடாக வளர்ந்து வருவதாக கூறிய அவர், இந்தியா புதிய கண்டுபிடிப்புகளுக்கு காட்டிய ஆர்வமே நாட்டின் முன்னேற்றம் என அவர் தெரிவித்தார்..
குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் செயல்பாடு இருப்பதாக கூறிய அவர்,அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பல்வேறு புதிய திட்டங்களை பட்டியலிட்டு கூறினார்..