திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து,அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக த் திகழ்ந்த முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர் தலைவர் கலைஞர் அவர்களின் 7 வது நினைவு நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ.,அவர்கள் தலைமையில், கோவை சித்தாபுதூர்,வி.கே.கே.மேனன் சாலை,ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்டு,
காந்திபுரம் அண்ணா சிலை அருகில் உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட திமுகழக துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ்,தளபதி இளங்கோ, கல்பனா செந்தில்,பொருளாளர் எஸ். எம். பி. முருகன்,மேயர் இரங்கநாயகி ராமச்சந்திரன், தலைமைக் கழக நிர்வாகிகள் தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து,சட்டத்துறை இணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் கே. எம். தண்டபாணி,வழக்கறிஞர் பி. ஆர். அருள்மொழி, மற்றும் திமுக கட்சியின் அனைத்து தொண்டர்களும் கலந்து கொண்டார்கள்.
