கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிறைவு நாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
கரூர், சுக்காலியூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, 78 பயனாளிகளுக்கு 5.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் தாய் மகேஸ்வரிக்கு “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிறைவு நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவி வழங்கினார்.
மாற்றுத்திறனாளியான மகேஸ்வரி காதொலி கருவி கேட்டு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருவி வழங்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் நிறைவு நாள் விழாவில் காதொலி கருவியை பெற்றுக் கொண்ட மகேஸ்வரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். அப்போது அவரை காலில் விழவேண்டாம் என்று செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.

