Skip to content
Home » பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

  • by Senthil

75வது குடியரசு தின விழா  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள்  தேசிய கொடியேற்றி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகளை கவுரவித்தனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானப் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார்.

அதைத்தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வருவாய்த்துறை, மாற்றுதிறனாளித்துறை,வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை என 41 பயனாளிகளுக்கு 47, 40,378 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவி கலைநிகழ்வில் ஆர்வத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டு ரசித்தார்.நடனமாடிய மாணவ மாணவிகளுக்கு ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

பெரம்பலூர்  விளையாட்டு மைதானத்தில் இன்று 75வது நடைபெற்ற குடியரசு தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து

மூவண்ண பலூன்களை பறக்க விட்டார்.
பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு,
சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தார்களின் வாரிசுதாரர்கள் 12 நபர்களுக்கும, தமிழறிஞர்கள் நான்கு நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

123 பயனாளிகளுக்கு ரூ.42,56,332 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 171 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 19 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 20 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் ஆட்சியர் கற்பகம் வழங்கினார்.

500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!