தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ் கிராஸ்கட் ரோடுக்கு முன்புறம் செல்லும்போது, நஞ்சப்பசாலையில் இருந்து காந்திபுரம் சத்தி ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த சிட்டி டிராவல்ஸ் என்ற தனியார் பஸ் தமிழ்நாடு அரசு விரைவு பஸ்சின் மீது மோதியது. தனியார் பேருந்து அதி வேகமாக வந்து மோதியதில் அரசு பேருந்து காந்திபுரத்தில் உள்ள வணிக வளாகம் மீது இடித்து நின்றது. இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுனர் நடத்துனர் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் முதியவருக்கு படுகாயம் அடைந்தார் . உடனடியாக 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.