கோவை வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார், நேற்று வீரகேரளம் – வேடப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வீரகேரளம் பேருந்தம் வழியாக வந்த காரை சந்தேகத்தின பேரில் போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காரை ஓட்டிவந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார்(24) என்பதும், இவர் கோவையி தங்கி மொத்தமாக குட்கா புகையிலை பொருட்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, கோபால் குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.