கடந்த 6 மாதத்தில் கோவை வனப்பகுதிகளில் 16 யானைகள் பலி..

37
Spread the love

கோவை மாவட்டம், நெல்லிமலைப்பகுதியில் ஒரு ஆண் யானை உடல்நலக் குறைவு காரணமாகக் கீழே விழுந்தது எழ முடியாமல் உயிருக்குப் போராடுவதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சையளித்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.  யானைகளுடன் நடைபெற்ற மோதலில் இந்த யானையின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. சாப்பிட முடியாததால் பலவீனமாகி விழுந்து இருக்கலாம் என வனத்துறை டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதேப்போன்ற மோதலில் 4 யானைகள் இறந்துள்ளன என வனத்துறை கூறுகின்றனர். மேலும் கோவை வனக்கோட்டத்தில் கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 16 யானைகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.. 

LEAVE A REPLY