Skip to content

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து…. 3 பேர் படுகாயம்… தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சையிலிருந்து கார் ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் வேம்புகுடி சுங்க சாவடி அருகே சென்றபோது அதே சாலையில் எதிர்புறமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் ஒரு பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த பெண் உள்பட 3-பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது பற்றி தகவலறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடைபெற்ற பகுதியை முற்றுகையிட்டு இந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடைகளும், தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது..

இதையடுத்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு தலைமையில் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் தஞ்சை – விக்ரவாண்டி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து காணப்பட்டது.

சுங்குச்சாவடி அருகே இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று உயிர்ச்சேதம் அதிகரித்து வருவதாகவும், சுங்கச்சாவடி அருகே முதலுதவி அமைக்க வேண்டும் எனவும், விபத்து நடைபெறும் போதெல்லாம் சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்தப் பகுதிக்கு வர மறுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்..

error: Content is protected !!