கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட்,பீகார் மாநிலங்களில் இருந்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தென்னை தொழிற்சாலை,கோழி பண்ணை,எஸ்டேட் தொழிலாளர்களாகவும் கல்குவாரி என பல்வேறு தொழில்களில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தீர் மாஞ்ஜி, 32. இவர் காட்டம்பட்டியில் உள்ள சாந்தி சிக்கன் பார்மில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு, 2வயதில் ரித்திகுமாரி என்ற மகள் உள்ளார். ரித்திகுமாரி கம்பனியின் கேட் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கம்பெனியில் இருந்து வெளியே மன்றாம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி சக்கரத்தில் குழந்தை சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின்பு குழந்தையின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்,இரண்டு வயது குழந்தை லாரிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
