தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.16-ல் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் களமழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
