Skip to content

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.. தஞ்சையில் விசாரணை

தஞ்சாவூர் தொம்பன்குடிசை ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கதக்கத ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறித்த தஞ்சாவூர் இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தளர். ஆனால் இறந்தவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தண்டவாளத்தை கடக்க முயலும்போது ரெயிலில் அடிப்பட்டு அந்த நபர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.தொடர்ந்து இறந்த நபரின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

error: Content is protected !!