Skip to content

நாளை ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆக 15) ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை (ஆக 15) நாட்டின்  79வது  சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.  சுதந்திர தினமான நாளை  அரசு விடுமுறை என்பதால்,  மெட்ரோ ரயிலில் பயணம் செயபவர்களின் எண்ணைக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் நாளை, ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தையொட்டி,  நாளை (ஆக-15)   ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேர இடைவெளிகள் பின்வருமாறு:

நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணிவரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!