Skip to content

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையின் மொத்த  நீர்மட்டம் 120 அடி.  கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு 10 மணிக்கு அணை  முழு கொள்ளளவை எட்டியது. இதையும் சேர்த்து கடந்த 2024ம் ஆண்டில் மேட்டூர் அணை  3 முறை  முழு கொள்ளளவை எட்டி உள்ளது.  இன்று காலை 8 மணி வரை அணையின் நீர்மட்டம் 120அடியாக(93.470டிஎம்சி) பராமரிக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணி அளவில்  அணைக்கு வினாடிக்கு 1,871    கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு1.305  கனஅடி திறக்கப்படுகிறது.  மழை இல்லாவிட்டால் அடுத்த வாரத்தில் பாசனத்திற்கு அதிக தண்ணீர் திறக்கப்படும். அப்போது அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கும்.

error: Content is protected !!