அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது கணவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக மத்திய அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிவந்ததாகவும் மேகலா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கணவர் கைது சட்டவிரோதமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதலாக பிரமாணப் பத்திரம் தாக்கல்..
- by Authour
