Skip to content

தஞ்சை அருகே அரசு பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை ஆய்வு செய்தார். பள்ளியில் வழங்கப்படும் காலை உணவு, ஆசிரியர்கள் – மாணவர்களின் வருகை உள்ளிட்டவை குறித்து கேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து சீதனம் அறக்கட்டளை சார்பாக பள்ளியில் அமைக்கப்பட்ட நூலகத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து

சீதனம் அறக்கட்டளை சார்பாக பள்ளிக்கு வழங்கப்பட்ட பேருந்தினையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் சீதனம் அறக்கட்டளை செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.வெங்கடேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன், பள்ளித் தலைமையாசிரியர் திரு.முருகானந்தம் ஆகியோரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள்

error: Content is protected !!