திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பிரத்தியேக பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்க்கே என் நேரு இன்று திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே என் நேரு,
வணிக வளாகம் கட்டுமான பணிகள், மார்கெட் உள்ளிட்டவற்றை விரைந்து முடித்து முதலமைச்சரிடம் நேரம் வாங்கி முதல்வர் அதை திறந்து வைப்பார்.
செங்கிப்படியில் நடக்கும் மகளிர் மாநாட்டிற்கு 1.25 லட்சம் பேர் வருவார்கள் அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இன்பதுரை வழக்கறிஞர் அதனால் என் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் அனுமதி தரவில்லை. அனைத்து புகார்களையும் கொடுத்த அனுமதி கேட்டு ஆளுநரிடம் கொடுத்தோம் அதற்கு அவர் ஒப்புதல் தரவில்லை. தந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
கடந்த தேர்தலிலும் பா.ம.க தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருந்தார்கள் அப்போதே நாங்கள் வெற்றி பெற்றோம்.
ராமதாஸ் எங்களுடன் கூட்டணிக்கு வருவாரா என்பது குறித்து எங்களுக்கு தெரியாது.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தில் பி.எஸ்.என்.எல் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்து முன்பதி மையம் திருச்சி மாநகர பகுதியில் திறப்பதற்கு யோசனை செய்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

