கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டன, 19வது முறையாக நாளை பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கு முன்பு ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போது, அவர் அமைச்சராக நீடிப்பதால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என நீதிகள் தெரிவித்திருந்தனர். தற்போது அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு ஜாமின் பெறும் வகையில் வாதங்களை முன்வைக்க அவர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.
