தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக் கூறி அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சென்னை, கிண்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்…. வாழ்த்து கூறிய அனைவருக்கு நன்றி. விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அமைச்சராக முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தை விளையாட்டு தலைநகராக மாற்ற முயற்சிப்பேன். இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாமன்னன் படம் தான் கடைசியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.