சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறார். இதனிடையே, தலைமைச் செயலகத்தில் உதயநிதிக்கான அறையை தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. அமைச்சராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு அறை தயார் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் 2வது தளத்தில் உதயநிதிக்கான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபாணி ஆகியோர் அறைகளுக்கு அருகில் உதயநிதியின் அறை தயாரானது. முன்னதாக அந்த இடத்தில் சிறப்பு திட்ட செயலாக்க துறையைச் சேர்ந்த அலுவல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்த துறையை சேர்ந்த அலுவலர்களுக்கு, 2ம் தளத்தில் இருந்த டில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயனின் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. டில்லி பிரதிநிதிக்கு, 10-வது நுழைவு வாயில் அருகே அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உதயநிதியின் அறையை தயார் செய்யும் பணிக்கு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 3-நாள்களாக இந்தப் பணியில் ஈடுபட்டனர்.