தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவில் மும்பை மற்றும் டில்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. நாட்டில் 3-வது முறையாக ஐதராபாத்தில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 140 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.