விஐபிகள் பெயரில் போலி முகவரியில் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் அக்கௌண்ட் தொடங்கி அவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்ணச்சநல்லுார் திமுக எம்எல்ஏ கதிரவன் பெயரில் தொடங்கப்பட்டுள்ள பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முகவரி மூலம் பலரிடம் பணம் கேட்டு மெசேஜ் சென்றுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளதனால், இது குறித்து அவரிடம் தொடர்பு கொள்வதிலும் பலருக்கு சிக்கல் உள்ளது. இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில்….. யாரிடமும் இதுபோன்று நிதி கேட்டு குறுந்தகவல்கள் அனுப்பவில்லை. எனவே பொதுமக்கள்,திமுக நிர்வாகிகள் எனது பெயரில் இயங்கி வரும் சமூக வலைதள போலி கணக்குகளை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தொிவித்துள்ளார்.