காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன். இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடந்த 2017ம் ஆண்டு நடந்த அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக அரசை கண்டித்து பேசினார்.
இதையடுத்து முகிலன் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 124 A, 153, 505 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தேசதுரோக வழக்கு அவர் மீது பாய்ந்தது. 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்தது.
கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் முகிலன் நேரில் ஆஜரானார். இறுதி தீர்ப்பை வாசித்த நீதிபதி ஜெயபிரகாஷ் தேச துரோக வழக்கிலிருந்து சமூக ஆர்வலர் முகிலனை விடுவித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முகிலன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
சமூகத்தில் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு போராடி வரும் சமூக ஆர்லலர்கள் மீது இவ்வாறு பொய் வழக்குகள் போடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.கோர்ட்டில் இருந்து வெளியே வந்த முகிலனுக்கும், அவரது வழக்கறிஞர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி பொன்னாடை போர்த்தினர்.
.
