தாமதமாக கிடைத்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்றார் வழக்கறிஞர்.சீர்காழி புதுப்பட்டினத்தை சேர்ந்த வாசு. 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென பைக்குடன் காணாமல் போனார். மூன்று நாட்கள் கழித்து உடல் பழையாறு கடற்கரையில் மீட்கப்பட்டது. அதே கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய மூன்று பேர் முன்விரோதம் காரணமாக வாசுவை கொலை செய்தது என அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இறந்து போனவர் பிரேத பரிசோதனையில் எந்த சந்தேகமும் இல்லை அவரது இறப்பு சான்றிதழ் சந்தேகம் உள்ளது இறந்து போனவர் புகைப்படம் கூட வழக்கில் இல்லை. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் செல்போன்கள் கைப்பற்றப்படவில்லை அந்த மூன்று நபர்களும் கொலை செய்வதற்கான ஒரு ஆதாரம் கூட போலீசார் நீதிமன்றத்தில் தக்கல் செய்யவில்லை சாட்சிகளும் ஜோடிக்கப்பட்ட சாட்சிகள் ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பன், கணேசன், கோவிந்தராஜன் ஆகிய மூவருக்கும் வாசு உயிரிழந்த விவகாரத்தில் தொடர்பு இல்லை என கூறி அந்த மூவரையும் நீதிபதி விடுதலை செய்தார்.
வழக்கறிஞர் சங்கர் கூறுகையில்,
13 ஆண்டுகளுக்குப் பிறகு மிகத் தாமதமாக நீதி கிடைத்துள்ளது. காவல்துறையினர் சரியாக புலன்விசாரணை செய்யாமல் அப்பாவிகள் மூவர்மீது எடுத்த நடவடிக்கை . நீதிமன்றத்துக்கு அலைந்த 12 வருடங்கள்தான் இந்த வழக்கில் அவர்கள் அனுபவித்த மிகப்பெரிய தண்டனை என்றார்.