Skip to content

நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை

நிபா வைரஸ் பாதிப்​பால் கேரளா​வில் உயி​ரிழந்தோர் எண்​ணிக்கை 2-ஆக உயர்ந்​துள்​ளது.இதை அடுத்து கேரள மாநிலத்​தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்​தி​ உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.இந்​நிலை​யில் பாலக்​காடு மாவட்​டம் மன்னார்​காடு பகு​தியை சேர்ந்த 57 வயது நபர் ஒரு​வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் எதிரொலியாக தமிழகம் கேரளா எல்லைப்

பகுதியான வாளையார் சோதனை சாவடியில் கோவை மாவட்ட சுகாதாரக் குழுவினர் மற்றும் மருத்துவ குழுவினர் கேரளாவில் இருந்து வரும் பேருந்துகள், லாரிகள், நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனங்கள் வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர். அதே போல கேரளாவில் இருந்து வரக் கூடிய நபர்களை மாஸ்க் அணிந்து வருமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!